
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே 38 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 50 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் வெங்கடேஷ் ஐயர் 60 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக அணியின் டாப் ஆர்டர் வீரர்களும் சோபிக்க தவறினர்.