Advertisement

இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சாதனையையும் படைத்துள்ளார்.

Advertisement
இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!
இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 24, 2024 • 09:17 PM

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும், 236 ரன்களைச் சேர்த்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 24, 2024 • 09:17 PM

இதில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களையும், மிலன் ரத்நாயக்கா 72 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 18 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும், கேப்டன் ஒல்லி போப் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.  பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 42 ரன்களுக்கும், ஹாரி புரூக் 56 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.

Trending

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 118 ரன்கள் முன்னிலை பெற்றது. 

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியானது 236 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 113 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 79 ரன்களியும், ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதன் மூலம் இலங்கை அணியானது 205 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி, இங்கிலாந்து மண்ணில் 7 அல்லது அதற்கும் குறைவாக இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்த ஏழாவது ஆசிய பேட்ஸ்மேன் எனும் பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன், சந்தீப் பாட்டீல், ரிஷப் பந்த், அனில் கும்ப்ளே, கபில் தேவ், அஜித் அகர்கர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சாதனையை படைக்கும் முதல் இலங்கை வீரர் எனும் பெருமையையும் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement