
Cricket Image for டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்! (Image Source: Google)
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. அமீரக கண்டிஷனுக்கு நன்கு பழக்கப்பட்ட பாகிஸ்தான் அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் அணியில் சீனியர் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக்கை எடுப்பது தொடர்பாக கேப்டன் மற்றும் தலைமை தேர்வாளருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, சீனியர் வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் ஷோயப் மாலிக் ஆகிய இருவரையும் அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.