
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இத்தொடரில் தற்போது வரை மூன்று போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமால் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு நடத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன். இந்நிலையில் ஒரு நல்ல கேப்டனுக்குரிய அனைத்து குணங்களும் ஷுப்மன் கில்லிடம் உள்ளது என நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.