
விளையாட்டு வீரர்கள் ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஒருநாள் தொடருக்கும் ஒரு அணிகளை அறிவித்துள்ளது. அதன் படி கேப்டன் கேன் வில்லியம்சன் (வெள்ளை பந்து) மற்றும் டிம் சவுத்தி (டெஸ்ட்), பயிற்சியாளர்கள் கேரி ஸ்டெட் மற்றும் ஷேன் ஜுர்கென்சன் ஆகியோர், பாகிஸ்தானின் கராச்சியில் ஜனவரி 10, 12, 14 தேதிகளில் நடக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு நாடு திரும்ப உள்ளனர். அவர்கள் பிப்ரவரியில் இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் படுத்துவதற்காக நாடு திரும்ப உள்ளனர்.
பாகிஸ்தான் போட்டிக்குப் பின் இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஜனவரி 18, 21, 24 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 தேதிகளிலும் நடைபெற உள்ளது. அந்த போட்டிகளுக்கு லூக் ரோஞ்சி தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார்.
அதே போல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு டாம் லாதம் கேப்டனாக செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்க் சாப்மேன் மற்றும் ஒடாகோ வோல்ட்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி ஆகியோர் இந்த தொடருக்கு வில்லியம்சன் மற்றும் சவுத்திக்கு பதிலாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.