
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து தங்களின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி அசத்தி வருகிறது. முன்னதாக அந்த அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கடந்த 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கேட்ச் பிடிக்கும் போது காயத்தை சந்தித்து வெளியேறியதை மறக்க முடியாது.
இதனால் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியுமா என கேள்வி எழுந்தது. பின்னர் கடின உழைப்புக்குப் பிறகு நியூசிலாந்தின் 3வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
ரன் ஓடும்போது ஃபீல்டிங்கில் இருந்து பந்தினை வீசும்போது அது வில்லியம்சனின் இடது கையில் பட்டது. இருந்தும் சிறிது நேரம் அணிக்காக விளையாடினார். பின்னர் வெற்றிக்கு குறைவான ரன்களே தேவைப்பட்டபோது ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இந்நிலையில் இன்று ஸ்கேன் செய்யப்பட்டப் பிறகு காயம் உறுதியாகியுள்ளது.