Advertisement
Advertisement
Advertisement

சூர்யகுமார் யாதவ் ஒரு அரிதான வீரர் - கபில் தேவ்!

சூர்யகுமார் யாதவ் மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்லை என்றும், அவர் நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிதினும் அரிதான திறமைசாலி என்றும் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 09, 2023 • 20:42 PM
Kapil Dev calls Suryakumar Yadav better than De Villiers, Richards, Tendulkar, Kohli and Ponting
Kapil Dev calls Suryakumar Yadav better than De Villiers, Richards, Tendulkar, Kohli and Ponting (Image Source: Google)
Advertisement

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மிகக்குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸுக்கு பிறகு மிஸ்டர் 360 என அழைக்கப்படும் வீரர் சூர்யகுமார் யாதவ். அதற்கு காரணம், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சூர்யகுமார் யாதவ் ஷாட்டுகளை விளையாடுவதுதான்.

ஸ்டம்ப்புக்கு பின்பக்கம் சிக்ஸர் அடிக்கும் வித்தைக்காரர் சூர்யகுமார் யாதவ். அவரது சில ஷாட்டுகள் அசாத்தியமானவை. இதுவரை ஏபி டிவில்லியர்ஸ் கூட அடித்திராத ஷாட்டுகள். அசாத்தியமான ஷாட்டுகளை எப்பொழுதாவது ஆடாமல் தொடர்ச்சியாக ஆடிக்கொண்டே இருக்கிறார். பவுலர் வீசும் எந்தமாதிரியான சவாலான பந்தையும் சிக்ஸர் அடிப்பதற்கான ஷாட் ஆப்சன் சூர்யகுமார் யாதவிடம் உள்ளது. அதுதான் அவரை மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

Trending


இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 45 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 3வது சதமாகும். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித்துக்கு(4) அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் படைத்தார்.

சூர்யகுமார் யாதவின் இந்த இன்னிங்ஸையும், அவரது அபாரமான பேட்டிங்கையும், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலருமே பாராட்டிவரும் நிலையில், கபில் தேவ் சூர்யகுமாருக்கு புகழாரம் சுட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கபில் தேவ், “சில நேரங்களில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்க்கும்போது அதை பாராட்டுவதற்கு வார்த்தையே இருக்காது. சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் வரிசையில் புறக்கணிக்க முடியாதபடி இணைந்துவிட்டார் சூர்யகுமார். அவர் ஆடும் சில ஷாட்டுகள் பவுலர்களை அச்சுறுத்துகிறது. ஃபைன் லெக் திசையில் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் மற்றும் நின்ற இடத்திலிருந்து மிட் ஆன், மிட் விக்கெட் திசைகளில் அவர் ஆடும் ஷாட்டுகள் அபாரமானவை. 

லைன் & லென்த்தை முன்கூட்டியே கணித்துவிடுகிறார். அதுதான் பவுலர்களுக்கு பெரிய பிரச்னையாக அமைந்துவிடுகிறது. மிக நேர்த்தியான ஷாட்டுகளை ஆடக்கூடிய விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், டிவில்லியர்ஸ், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் மாதிரி எத்தனையோ சிறந்த பேட்ஸ்மேன்களை நான் பார்த்திருக்கிறேன். சூர்யகுமார் யாதவுக்கு தலைவணங்குகிறேன். இவரை மாதிரி வீரர் எல்லாம் நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிதினும் அரிதான வீரர்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement