Advertisement

கோலி - கங்குலி மனதிறந்து பேச வேண்டும் - கபில் தேவ்

விராட் கோலியும் செளரவ் கங்குலியும் மனம் விட்டுப் பேசி கருத்துவேறுபாடுகளைக் களைய வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.

Advertisement
Kapil Dev wants Kohli, BCCI to bury the hatchet
Kapil Dev wants Kohli, BCCI to bury the hatchet (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 25, 2022 • 06:21 PM

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 25, 2022 • 06:21 PM

இதையடுத்து அவர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் விராட் கோலி - பிசிசிஐ இடையே மோதல் இருப்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது.

Trending

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் கபில் தேவ், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியபோது அதிக சுமையைத் தாங்குவதாகப் பலரும் கருதினோம். கேப்டன் பதவியை விட்டு விலகவேண்டும் என யாரும் எண்ணவில்லை. அற்புதமான வீரர். அவருடைய முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

இருவரும் (கோலியும் கங்குலியும்) மனம் விட்டுப் பேசி பிரச்னையைச் சரி செய்திருக்க வேண்டும். போனை எடுத்து ஒருவருக்கொருவர் பேசுங்கள். நாட்டையும் அணியையும் முன்னிறுத்துங்கள். ஆரம்பத்தில் எனக்கும் கேட்டதெல்லாம் கிடைத்தது. சில நேரங்களில் நீங்கள் கேட்டது கிடைக்காது. 

அதற்காக கேப்டன் பதவியை விலக வேண்டும் என்பதில்லை. அதனால் தான் அவர் கேப்டன் பதவியை விட்டு விலகியிருந்தால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி நிறைய விளையாடி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement