
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கார்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - அனீஷ் கேவி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த கையோடு அனீஷ் கேவி 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்திய நிலையில், 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 102 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஸ்மாறன் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் ஆகியோர் தலா 28 ரன்களையும், அபினவ் மனோஹர் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைச் சேர்த்தது. பரோடா அணி தரப்பில் ராஜ் லிம்பானி மற்றும் அதித் செத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடா அணியில் அஷ்வின் குமார் 14 ரன்களில் விக்கெட்டி இழந்து ஏமாற்றமளித்தார்.