எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
லீக் ஆட்டமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு ஆட்டமாக இருந்தாலும் சரி, முன்னோக்கி பார்க்க வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன் என இந்திய வீரர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்பட்டவர் கருண் நாயர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் முற்சதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் கருண் நாயர் படைத்துள்ளார். ஆனால் அதன்பின், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரே அடியாக ஓரங்கட்டப்பட்டார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடுமையாக உழைத்துவரும் கருண் நாயர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்தாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணிக்காக விளையாடிய அவர், 690 ரன்களைக் குவித்ததுடன் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.
Trending
அதுமட்டுமில்லாமல் மஹாராஜா கோப்பை டி20 தொடர், சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே மட்டுமின்றி இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பினை பெற கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில், நான் இப்போது விளையாடும் விளையாட்டுதான் மிக முக்கியமான விளையாட்டு என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சீசனின் தொடக்கத்தில் நான் இவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால், நிச்சயம் நான் அதனை எடுத்திருப்பேன். முன்பு நான் ஒரு வருடம் வீட்டில் இருந்துடன், எனக்கு கிடைத்த வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். மேலும் எதுவும் செயல்படாதபோது, நான் என்ன செய்ய முடியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
எனவே, எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, மீண்டும் பங்களிக்க முடிந்தது நன்றாக இருந்தது. கடினமான ஆண்டுகள் என்னை இன்னும் அதிகமாக விளையாட உதவியது. என்னைப் பொறுத்தவரை, நான் இப்போது விளையாடும் விளையாட்டுதான் மிக முக்கியமான விளையாட்டு. அது லீக் ஆட்டமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு ஆட்டமாக இருந்தாலும் சரி, முன்னோக்கி பார்க்க வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஒவ்வொரு நாளும் மீண்டும் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் கனவுடன் தான் விழிக்கிறேன். இந்த உத்வேகம் தான் என்னை முன்னோக்கி கொண்டு செல்கிறது. மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன். கோப்பைகளை வெல்வது எனக்குப் பிடிக்கும், கடந்த ஆண்டு ரஞ்சி இறுதியில் தோற்றோம். இந்த முறை அதைச் சரிசெய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now