
Ravi Shastri India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தியாவின் தனக்குப் பிடித்தமான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி அவர் தேர்வு செய்த இந்த அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில், மூன்றாம் இடத்திற்கு அறிமுக வீரர் சாய் சுதர்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அவர் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதாகவும், சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவரைப் பொறுத்தவரை. ஐபிஎல் 2025 இல் ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் குறித்து, இந்த சுற்றுப்பயணம் தனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.