
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய ஒரு தீர்ப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங்கின் அடித்த பந்தை லாங் ஆன் பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கருண் நாயர் கேட்ச் பிடித்த நிலையில், அவரால் சரியான பேலன்ஸ் பண்ணமுடியாமல் பந்தை மீண்டு மைதானத்திற்கு தூக்கி எறிந்தார். ஆனாலும் அவர் அந்த பந்தை தூக்கி போடும் முன்பே பவுண்டரி எல்லையை தொட்டிருந்தார்.
இதனால் கருண் நாயரே அதனை சிக்ஸர் என்று அறிவித்திருந்தார். இருப்பினும் கள நடுவர்கள் பவுண்டரி சென்றதா இல்லையா என்பதை உறுதிசெய்ய மூன்றாம் நடுவரை அனுகினர். பின்னர் அதனை சரிபார்த்த மூன்றாம் நடுவர் காணொளியை சரிபார்த்த பின்னர் அதனை சிக்ஸர் என்று அறிவித்தார். ஆனால் காணொளியை சரிபார்க்கும் போதே கருண் நாயரின் கால் பவுண்டரி லைனில் பட்டது தெளிவாக தெரிந்திருந்தது.