
இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஆலி போப் முதலில் பந்துவீசுவதாக அறித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தர். இந்திய அணி சார்பில் ராகுல் - ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தனர்.
இந்த போட்டியில் பெரிய ஸ்கோரை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் 4ஆவது ஓவரிலேயே 2 ரன்களை மட்டும் எடுத்த ஆட்டமிழந்தார். அணியின் மெற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவருக்கும் இடையே சிறப்பான பார்ட்னர்ஷிப் உருவான நிலையில் ஷுப்மன் கில் 21 ரன்களை எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
மேலும் நிதானமாக விளையாடிய சாய் சுதர்ஷன் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்னிலும், துருவ் ஜூரெல் 19 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்தியா அணி 153 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இணைந்த கருண் நாயர் - வாஷிங்டன் சுந்தர் இணை விக்கெட் இழப்பை தடுத்தது நிறுத்தினர். இதில் கருண் நாயர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.