
Asia Cup 2025: ஹாங்காங் ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியனது செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.