
Kemar Roach recalled as West Indies announce squad for ODIs against India (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.
அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீரான் பொல்லார்ட் தலைமையிலான இந்த அணியில் மூன்றாண்டுகளுக்கு பிறகு கீமார் ரோச்சிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.