
இன்றைய டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தில் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினோராயிரம் ரண்களைக் கடந்து சச்சின் சாதனையை முறியடிக்கும் வகையில் மிக வேகமாக ரண்களை திரட்டி மிக அபாரமாக விளையாடி வருகிறார்.
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் அவர் 13 சதங்களை தாண்டி அடித்திருக்கிறார் இந்த வகையில் இது ஒரு உலக சாதனையாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவாகி இருக்கிறது. தற்பொழுது இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் அணுகி வருகிறது. பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லாத் துறையிலும் அதிரடியாகவே இங்கிலாந்து விளையாடுகிறது.
ஒட்டுமொத்த அணியினரும் தாக்குதல் பாணியில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணியில் மிக ஒழுக்கமான பேட்டிங் முறைகளை கொண்டிருக்கும் ஜோ ரூட்டும் அதிரடியான முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். டி20 கிரிக்கெட்டிலேயே பல வீரர்கள் விளையாடாத ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் அனாயசமாக விளையாடி ஆச்சரியப்படுத்துகிறார்.