Advertisement

பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!

டெக்ஸாஸ் அணிக்கெதிரான போட்டியில் நியூயார்க் அணி வெற்றிபெற்றதையடுத்து, எம்ஐ அணியின் கீரன் பொல்லார்ட், டெக்ஸாஸ் அணியின் டுவைன் பிராவோவை கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 29, 2023 • 13:49 PM
பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டடத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் விளையாடிய டெக்ஸாஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதைத்தொடர்ந்து 159 ரன்களை துரத்திய எம்ஐ அணிக்கு ஜஹாங்கீர் 36, கேப்டன் நிக்கோலஸ் பூரான் 23, தேவால்ட் ப்ரேவிஸ் 41, டிம் டேவிட் 33, டேவிட் வீஸ் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து 19 ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதனால் ஜூலை 31இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் சீட்டல் அணியை எதிர்கொள்ள எம்ஐ நியூயார்க் தகுதி பெற்றது.

Trending


மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய டெக்ஸாஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறியது. குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் சந்தித்த 2 போட்டிகளிலும் மும்பையை தோற்கடித்த சென்னை இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வென்றது. இந்நிலையில் இதே தொடரின் லீக் சுற்றில் சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் அணியிடம் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ வீழ்ந்தது.

ஆனால் அவை அனைத்திற்கும் பதிலடியாக இந்த போட்டியில் டெக்சாஸ் அணியை தோற்கடித்த எம்ஐ வீட்டுக்கு அனுப்பி வைத்தது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக 16 வருட ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய அனல் பறந்த மறக்க முடியாத தருணங்களில் 2012 சீசனில் எலிமினேட்டரில் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்த பிராவோ விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கலாய்த்து பதிலடி கொடுத்ததை மறக்க முடியாது.

 

அதை மறக்காமல் வைத்திருந்த பொல்லார்ட் இந்த போட்டியின் முடிவில் தம்மை காண்பதற்காக வந்த பிராவோவை ஒன்றுக்கு 2 முறை அதே போல விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்லுங்கள் என்று சிரித்துக் கொண்டே கலாய்த்து மாஸ் பதிலடி கொடுத்தார். அதற்கு “காலில் விழுகிறேன் கலாய்ப்பதை நிறுத்து” என்ற வகையில் பிராவோ ரியாக்சன் கொடுத்தது அவர்களிடையே இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement