ரேனுகா சிங் ஓவரை பிரித்து மேய்ந்த கிரண் நவ்கிரே - வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் வீராங்கனை கிரண் நவ்கிரே அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வோல் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 99 ரன்களைக் குவித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து கிரண் நவ்கிரே 46 ரன்களையும், கிரேஸ் ஹேரிஸ் 39 ரன்களையும் குவித்தனர். ஆர்சிபி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Trending
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி போன்ற நட்சத்திர வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 69 ரன்களையும், ஸ்நே ரானா 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களில் ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன், கேப்டன் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஜார்ஜியா வோல் ஆட்டநாயகி விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் யுபி வாரியர்ஸ் வீராங்கனை கிரண் நவ்கிரே ஆர்சிபி அணி பந்துவீச்சாளர் ரேனுகா சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசினார். அதன்படி இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை ரேணுகா வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட கிரண் நவ்கிரே அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அச்த்தினார்.
HAMMERED!
— Women's Premier League (WPL) (@wplt20) March 8, 2025
Kiran Navgire was on fire during a breathtaking cameo of 46(16) #UPW are 154/2 after 13 overs.
Updates https://t.co/pXDVY3MCgZ #TATAWPL | #UPWvRCB | @UPWarriorz pic.twitter.com/00kHXFQtMd
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் கிரண் நவ்கிரே அந்த ஒரே ஓவரில் மொத்தமாக 22 ரன்களை விளாசினார். மேற்கொண்டு இப்போட்டியில் 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நவ்கிரே 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில் கிரண் நவ்கிரே அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now