
Indian Premier League: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளார் பரத் அருண் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸுடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பார்த்த அளவில் சிறப்பாக செயல்பட தவறியதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகள் இரண்டு முடிவில்லை என மொத்தமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.