
KKR Batsman Tim Seifert Tests Positive For Covid, Stranded In India (Image Source: Google)
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டிம் செய்ஃபெர்ட். இவர் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சிஎஸ்கே பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் டிம் செய்ஃபெர்ட் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் டிம் செய்ஃபெர்ட் தொற்றில் இருந்து குணமடைந்த பிறகு, தனி விமானம் மூலம் நியூசிலாந்து செல்லவுள்ளார். அங்கு அவர் 14 நாள்கள் தனிமை படுத்தலுக்கு பிறகு அவரது குடும்பத்தினருடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.