
'KKR Deserved To Win The IPL Title This Time More Than Anyone Else': MS Dhoni (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி, “நான் சிஎஸ்கே அணியை பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்னர் கொல்கத்தா அணியை பற்றி பேசிய ஆகவேண்டும். இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மோசமான நிலையில் இருந்த கொல்கத்தா அணி இரண்டாவது பாதியின் போது மீண்டும் இவ்வாறு பலமாக திரும்புவது கடினம்.
ஆனாலும் அவர்கள் கம்பேக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த ஐபிஎல் தொடரில் எங்களை தவிர்த்து வேறு ஒரு அணி இந்த கோப்பையை கைப்பற்ற தகுதியானது என்றால் நிச்சயம் அது கொல்கத்தா தான்.