மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது - நிதிஷ் ராணா!
சுயாஷ் சர்மா, சாதாரணமான ஸ்பின்னர் தான், ஆனால் அவரிடம் இருக்கும் இந்த கூடுதலான வித்தை மற்ற ஸ்பின்னர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது என நிதிஷ் ராணா பேசியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா அணி தடுமாறி வந்தபோது ஷர்துல் தாக்கூர் உள்ளே வந்து அபாரமான ஆட்டம் விளையாடினார். 89 க்கு 5 விக்கெட்டுகளை இழந்ததிலிருந்து, கொல்கத்தா அணியை 204 ரன்கள் வரை எடுத்துச் சென்றார். ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த இலக்கை சேஸ் விடலாம். ஏனெனில் அதிக ஸ்கொர் அடிக்கக்கூடிய மைதானமாக இதுவரை இருந்திருக்கிறது என்கிற நம்பிக்கையில், களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது.
ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய துவங்கியதில் இருந்தே ஆர்சிபி அணிக்கு சரிவு துவங்கியது. முதலில் சுனில் நரேன் விராட் கோலியின் விக்கெட் எடுத்து துவங்கி வைத்தார். அதன் பிறகு வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வருண் சக்ரவர்த்தி கைப்பற்றினார். இந்த போட்டியில் அறிமுகமான, மிஸ்டரி ஸ்பின்னராக பார்க்கப்பட்ட, சுயாஸ் சர்மா லெக் ஸ்பின்னர் வீசக்கூடியவர்.
Trending
இவர் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி மேலும் தாக்குதலை ஏற்படுத்தினார். இவரது கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதை தவிர, மற்ற மூன்று ஒவ்வொருவரிலும் பேட்ஸ்மேன்கள் முற்றிலுமாகத் திணறினர். தினேஷ் கார்த்திக் இவரிடம் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சுயாஷ் சர்மா பற்றி பேசிய நித்திஷ் ராணா கூறுகையில், “அவர் மிஸ்டரி ஸ்பின்னர் ஒன்றும் கிடையாது. சாதாரண லெக் ஸ்பின்னர் தான். ஆனால் அவரிடம் மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது. பந்தை மத்த ஸ்பின்னர்களை விட இன்னும் வேகமாக கையை சுழற்றி வீசுகிறார். அதுதான் பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் திணறடிக்கிறது.
அடுத்தடுத்த போட்டிகளில் எங்களுக்கு எக்ஸ்-பேக்டராக இருப்பார். முக்கியமான கட்டத்தில் பந்துவீசுவதற்கு இவரை வைத்து திட்டமிட்டு வருகிறோம். இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த அடுத்த போட்டிகளில் இதை தொடர்வோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now