Suyash sharma
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை வழக்கம் போல் அதிரடியாக தொடங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் விக்கெட்டாஇ இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங்கும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.
Related Cricket News on Suyash sharma
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை 101 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
இங்கிலிஷ், ஸ்டோய்னிஸை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் சுயாஷ் சர்மா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 157 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
ஆர்சிபி அணி வீரர் சுயாஷ் சர்மா பந்துவீச்சில் கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
யு-19 தேர்வாகததால் இரண்டு மணி நேரம் அழுதேன் - சுயாஷ் சர்மா!
கடந்த ஆண்டு அண்டர் 19 அணி தேர்வுக்கான தகுதிப்போட்டிகளில் தேர்வாகாததால் எனது தலையை மொட்டை அடித்துக் கொண்டேன் என கேகேஆர் அணியின் இளம் வீரர் சுயாஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது - நிதிஷ் ராணா!
சுயாஷ் சர்மா, சாதாரணமான ஸ்பின்னர் தான், ஆனால் அவரிடம் இருக்கும் இந்த கூடுதலான வித்தை மற்ற ஸ்பின்னர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது என நிதிஷ் ராணா பேசியுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சிஎஸ்கே அணியின் 11 வருட சாதனையையும் முறியடித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47