ரஷித் கான், அமித் மிஸ்ரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் வருன் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் ஐபிஎல் தொடரின் தனது 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார்.
இதனை செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது இந்த சாதனை ரஷித் கான் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரின் பெயரில் உள்ளது, அவர்கள் 83 ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், வருண் சக்ரவர்த்தி 82 ஐபிஎல் போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்
- காகிசோ ரபாடா - 64 போட்டிகள்
- லசித் மலிங்கா - 70 போட்டிகள்
- புவனேஷ்வர் குமார் - 81 போட்டிகள்
- ரஷீத் கான் - 83 போட்டிகள்,
- அமித் மிஸ்ரா - 83 போட்டிகள்
- ஆஷிஷ் நெஹ்ரா - 83 போட்டிகள்
- யுஸ்வேந்திர சாஹல் - 84 போட்டிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், ரோவ்மன் பாவெல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி
Also Read: LIVE Cricket Score
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), தீபக் ஹூடா/உர்வில் படேல், நூர் அகமது, கலீல் அகமது, மத்திஷா பத்திரனா/நாதன் எல்லிஸ்.
Win Big, Make Your Cricket Tales Now