
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று முடிந்த வேளையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக முதன் முறையாக ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் செயல்பட இருக்கிறார். ஏற்கனவே இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியின்போது டெஸ்ட் போட்டியிலும் கேஎல் ராகுல் கேப்டனாக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து கேஎல் ராகுல் தற்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள காயத்தினால் இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியையும் வழிநடத்த இருக்கிறார். நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் இந்த ஒருநாள் தொடரிலும் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.