
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ரோஹித் ஷர்மாவை விட ஒருபடி வேகமாகவே விளையாடிய லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆனால், மைதானத்தை விட்டு வெளியேறும் வரை, அவர் தான் அவுட்டானதை ஒப்புக் கொள்ளவேயில்லை.
அதாவது, ஆண்டர்சன் ஓவரில் அவர் பந்தை எதிர்கொள்ள தயாரான போது, அவரது பேட் அவரது பேடின் பின்பகுதியை உரசி முன்னாள் வந்தது. இதனால், பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலி எழுந்தது. இங்கிலாந்து வீரர்களும் ஸ்ட்ராங்காக அவுட் அப்பீல் செய்தனர். தொடர்ந்து ரிவ்யூ கேட்கப்பட, அப்போது தான் பந்து பேட்டிங் பின்புறம் மிக மிக லேசாக உரசிச் சென்றிருப்பது தெரிந்தது.