
KL Rahul Gains Places, Jasprit Bumrah Enters Top 10 In ICC’s Latest Test Rankings (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் லபுசாக்னே முதலிடம் பிடித்து அசத்தியுளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 2ஆம் இடத்தில் உள்ளார்.
இதில், ரோகித் சர்மா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 9ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் கேஎல் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.