
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்களையும், திலக் வர்மா 52 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது 35 பந்துகளை சந்தித்து 22 ரன்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.