
KL Rahul Likely To Lead India In South Africa ODI Series If Rohit Fails To Recover (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் மும்பையில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரை தவிர விட்டுள்ளார். தற்போது பெங்களூருவில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு வரும் ரோஹித் இன்னும் ஒரு வாரத்தில் காயம் குணமடைந்து இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.