
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயா மூன்றாவது ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியானது இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்களையும், திலக் வர்மா 52 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.