
KL Rahul shares his views on captaincy ahead of Zimbabwe ODIs (Image Source: Google)
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி வரும் நாளை ஹராரேவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், நீண்ட நாள்களுக்கு பின் அணியில் இடம்பெற்றது மட்டுமிலாமல், அணியை வழிநடத்தவும் உள்ள கேஎல் ராகுல் தனது கம்பேக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், “நீங்கள் இரண்டு மாதங்கள் வெளியே இருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் நீங்கள் அணிக்காகவும் நாட்டிற்காகவும் செய்ததை அவர்கள் மறக்கவில்லை. வீரர்கள் உண்மையில் அத்தகைய சூழலில் செழிக்கிறார்கள்.