Advertisement

பந்திற்கு பதிலா இவர கீப்பரா மாத்துங்க - பிராட் ஹாக் அட்வைஸ்!

ரிஷப் பந்திற்கு பதிலாக நிச்சயம் மாற்று வீரரை தேர்வு செய்யலாம். ஆனால் அது சாஹா இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan August 29, 2021 • 22:33 PM
KL Rahul Should Replace Rishabh Pant as Wicketkeeper - Brad Hogg
KL Rahul Should Replace Rishabh Pant as Wicketkeeper - Brad Hogg (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் வெறும் 87 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக அனுபவ வீரரான விருத்திமான் சஹா இடம்பெறவேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. 

Trending


இந்நிலையில் ரிஷப் பந்த் பதிலாக நிச்சயம் மாற்று வீரரை தேர்வு செய்யலாம். ஆனால் அது சாஹா இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், “இந்திய அணிக்காக ரிஷப் பந்த் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இந்த தொடரில் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இதன் காரணமாக இந்திய அணி ஒரு சவாலான காரியத்தை கையில் எடுத்தாக வேண்டும். அதன்படி துவக்க வீரரான ராகுல் கீப்பராகவும் செயல்பட வேண்டும்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்த இரண்டிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படி ராகுலை கீப்பராக தேர்வு செய்தால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் விளையாட வைக்க முடியும். அப்படி ராகுல் கீப்பராக செயல்படும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாக அணியில் இணையலாம்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement