
ஐபிஎல் தொடர் வருகிற 26ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் அணிகள் தீவிரம் காட்டிவருகின்றன. கடந்த சீசனில் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்ற நிலையில், இம்முறை குஜராத் மற்றும் லக்னோ என கூடுதலாக இரு அணிகள் களம் இறங்கவுள்ளன.
இதில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தற்போது லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்து காயம் காரணமாகப் பாதியில் வெளியேறிய ஸ்ரேயஸ் ஐயர் இந்தத் தடவை கொல்கத்தா அணிக்குத் தலைமை ஏற்கவுள்ளார்.
இந்த நிலையில் இரு கேப்டன்களும் தங்களது அணிகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ராகுல் குறித்துக் கூறியுள்ள ஸ்ரேயஸ் ஐயர், “ராகுல் தனது பேவரைட் கேப்டன் எனப் புகழ்ந்துள்ளார். சிறந்த வீரரான ராகுல் களத்திலும் டீம் மீட்டிங்கிலும் சக வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக நடந்துகொள்வார்.