IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கணித்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
Trending
மேற்கொண்டு விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோருடன் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இடம்பிடித்துள்ளனர். மேலும் இத்தொடரில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஆச்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோரைத் தேர்வுசெய்துள்ள அவர், 5ஆம் வரிசையில் கேஎல் ராகுலிற்கு பதிலாக சர்ஃப்ராஸ் கானிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Pant's Comeback or Risky Move? No KL Rahul And Dhruv Jurel In My playing 11.
— Brad Hogg (@Brad_Hogg) September 10, 2024
What's your playing 11?#Cricket #INDvBAN #Test pic.twitter.com/9WqjkCAakW
மேற்கொண்டு அணியின் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ள அவர், சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவையும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் அகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இவர் தேர்வு செய்திருக்கு இந்த அணியில் கேஎல் ராகுலிற்கு வாய்ப்பு தராதது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
பிராட் ஹாக் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
Win Big, Make Your Cricket Tales Now