
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய சீனியர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்த அணியில் துணைக்கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், ஷர்தூல் தாக்கூர், இஷான் கிஷனுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் காரணமாக சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இரண்டாவது போட்டியில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.