
Kohli becomes first player to win 50 international matches in each format (Image Source: Google)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இவர் இதுவரை 97 டெஸ்டுகள், 254 ஒருநாள், 95 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்றதில்லை.
அதன்படி மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று 50-வது வெற்றியில் பங்களித்துள்ளார் விராட் கோலி.