Advertisement

ஹர்திக் பாண்டியாவுண்ட இணைந்து நடனமாடிய விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் நடனமாடும் காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Kohli, Hardik Show Off Cool Dance Moves Ahead Of Australia T20Is
Kohli, Hardik Show Off Cool Dance Moves Ahead Of Australia T20Is (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 19, 2022 • 10:01 PM

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கக்கூடியவர் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. களத்திலும் சரி, வெளியேயும் உத்வேகத்துடன் செயல்படும் பாண்டியா அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலியுடன் அவர் நடனமாடியுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 19, 2022 • 10:01 PM

நீண்ட ஓய்வுக்கு பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியில் இணைந்த விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 71 வது செஞ்சுரியை எதிர்நோக்கி நெடுநாள் காத்திருந்த கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறினாலும் எதிர்வரும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகக்கோப்பை T20 போட்டிகளுக்கு தயாராகும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி. இந்நேரத்தில் பாண்டியா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Trending

பாண்டியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியுடன் இணைந்து நடமாடும் காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், இறுதியில் அவர் சில ஸ்டெப்களையும் போட, கோலி புன்னகையுடன் அதனை பார்க்கிறார். நீண்ட நாளாக மன இறுக்கத்தில் இருந்ததாக கோலி சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த காணொளி அவரது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.

 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 டி20, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்க இருக்கிறது. இதில் இந்த இருவரின் பங்களிப்பு மிக முக்கியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 வரை நடைபெற இருக்கிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement