
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளையும் வென்று இருக்கிறது. இந்திய அணி இந்த ஐந்து போட்டிகளையும் வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாக பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இரண்டு ரன்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் தத்தளித்த பொழுது, கேஎல் ராகுலுடன் இணைந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணியின் வெற்றி பயணத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கு அடுத்து அவரது ஆட்டம் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் 5 போட்டிகளையும் இரண்டாவது பகுதியிலேயே விளையாடியிருக்கிறது. இதில் விராட் கோலி 350 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடக்கம். நேற்று பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் காணப்பட்ட தரம்சாலா மைதானத்தில், சிறப்பான திட்டங்களுடன் களம் இறங்கி சிறப்பாக செயல்படும் நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்திய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்த பொழுது, மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை விராட் கோலி கரை சேர்த்து, ஐந்தாவது வெற்றியை பெற்று தந்தார்
விராட் கோலியின் ரன் சேஸ் பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார். விராட் கோலி ஒரு கடினமான காரியத்தை மிக எளிதாக நமக்கு காட்டும்படி செய்கிறார் என்று அதில் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ரன்களை துரத்துவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் விராட் கோலி அதை மிகவும் எளிதாக்குகிறார். அவர் இவ்வளவு காலமாக அதைத்தான் செய்து கொண்டு வருகிறார்.