-mdl.jpg)
டி20 உலககோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து நாடுகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலககோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, சில தொடர்களிலும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஃபார்ம் அவுட்டால் தவித்து வரும் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து கழட்டி விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட்கோலி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி முடிந்தவுடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். டெஸ்ட் போட்டியில் கோலியின் கேப்டன் பதவியை தானாக பிசிசிஐ நீக்கி அனைத்து வித போட்டிக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தது. டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து தொடர்ந்து 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று புதிய சாதனையையும் படைத்து உள்ளார் ரோஹித் சர்மா.