நாங்கள் இந்தத் தோல்விக்கு தகுதியானவர்கள் - விராட் கோலி!
உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள்தான் ஆட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்தோம் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக பெங்களூர் அணியை வீழ்த்தியது.
டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் 29 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலி 54 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இவரைத் தவிர்த்து லோம்பரர் மட்டுமே 36 ரன்கள் எடுக்க மற்ற யாரும் சரியாக விளையாடாத காரணத்தால், 179 ரன்கள் மட்டுமே எடுக்க தோல்வி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணிக்கு வந்தது.
Trending
முதலில் பெங்களூரு அணிதரப்பில் ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 24 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார். கொல்கத்தா அணிக்கு வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தோல்விக்குப் பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, “உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள்தான் ஆட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்தோம். நாங்கள் இந்தத் தோல்விக்கு தகுதியானவர்கள். நாங்கள் தொழில் முறை வீரர்கள் போல விளையாடவில்லை. நாங்கள் நன்றாக பந்துவீசினோம் ஆனால் ஒழுங்காக ஃபீல்டிங் செய்யவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசமாக அமைந்தது. நல்ல இரண்டு வாய்ப்புகளை தவற விட்டோம். இதனால் 25, 30 ரன்கள் சேர்த்துக் கொடுத்து விட்டோம்.
திருப்பி நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பேட்டிங்கை ஆரம்பத்தில் சிறப்பாக அமைத்தோம். ஆனால் நான்கைந்து சாதாரணமான அவுட்டுகள், விக்கெட் எடுக்கக்கூடிய பந்தே இல்லாததில், நாங்கள் நேராக பீல்ர்களின் கைகளுக்கு அடித்தோம். நாங்கள் விக்கெட்டுகளை இழந்த பொழுது கூட ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்து, எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. நாங்கள் ஒரு பார்ட்னர்ஷிப் குறைவாக இருந்து விட்டோம். நாங்கள் மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now