Advertisement

சிறந்த ஒருநாள் வீரர் விருது: விராட், ஷுப்மன், ஷமி ஆகியோரது பெயர் பரிந்துரை!

2023ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஐசிசி விருதுக்கு முகமது ஷமி, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரது பெயர் பரிந்துரைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Advertisement
சிறந்த ஒருநாள் வீரர் விருது: விராட், ஷுப்மன், ஷமி ஆகியோரது பெயர் பரிந்துரை!
சிறந்த ஒருநாள் வீரர் விருது: விராட், ஷுப்மன், ஷமி ஆகியோரது பெயர் பரிந்துரை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 04, 2024 • 09:26 PM

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 04, 2024 • 09:26 PM

இதில், விராட் கோலி, ஷுப்மன் கில், முகமது ஷமி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல் பெயர் இடம் பெறவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியா வீரர் ஷுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1584 ரன்கள் குவித்துள்ளார். அதோடு, 24 கேட்சுகளும் பிடித்துள்ளார். ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கில் 5ஆவது இடம் பிடித்தார். 

Trending

இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (1996, 1998), ராகுல் டிராவிட் (1999), சவுரவ் கங்குலி (1999) ஆகியோர் அதிக ரன்கள் குவித்துள்ளனர். மேலும் கில் ஒரு இரட்டை சதம், 5 சதங்கள் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி 354 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில் 208 ரன்களை குவித்து, இளம் வீரராக இரட்டை சதம் அடித்தார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு 2023 ஆம் ஆண்டு தொடக்கம் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும், பின்பாதி மறக்க முடியாத ஆண்டாக அமைத்துக் கொடுத்தது. இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி 3 முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி புகழின் உச்சத்திற்கு சென்றார். இதில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதுவரையில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஷமி விளையாடிய 18 போட்டிகளில் அவர் 55 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த ஆண்டில் விராட் கோலி விளையாடிய 27 ஒருநாள் போட்டிகளில் 12 கேட்சுகள் உள்பட 1,377 ரன்கள் குவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி அவர், 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார். இதற்கு முன்னதாக சச்சின் எடுத்த 673 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேரில் மிட்செல் 2023ஆம் ஆண்டில் 1204 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 552 ரன்களையும் சேர்த்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவும் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement