
Kohli Sledges Bairstow, Bairstow Unleashes Hell, Kohli Takes A Catch To Dismiss Bairstow; Watch Vide (Image Source: Google)
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ரன்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. முதல் இரண்டு நாட்களிலும் மழை பெய்ததால் ஆட்டம் பல முறை இடையிடையே நிறுத்தப்பட்டது.
இதில் இரண்டாம் நாள்ம் கோஹ்லியும் பேர்ஸ்டோவும் மழை இடைவேளையின் போது ஒன்றாக நடந்து செல்வதைக் காண முடிந்தது. அப்போது இரு வீரர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இருப்பினும், 3 ஆம் நாள் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் பரபரப்பான வார்த்தை பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் இங்கிலாந்து அணியின் உக்கிரமான தொடக்கத்திற்கு அது வழிவகுத்தது.