
Kolkata Knight Riders vs Punjab Kings - Probable XI (Image Source: Google)
பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெற்றிபெற வேண்டி இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.