
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதில் கிரேய்க் பிராத்வைட் கடந்த 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகியதை அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். அவர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியையும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்ததை தவிர்த்து மற்ற தொடர்களை பெரும்பாலும் இழந்தது.
மேற்கொண்டு அவர் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாம செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பாவெலும் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.