
இந்த மாதம் 30ஆம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அணியை இறுதி செய்வதற்கு ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்படும் அணி மிக முக்கியமானது. எனவே 15 பேர் கொண்ட அணிக்கு பதிலாக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அணியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த கே எல் ராகுல் சேர்க்கப்பட்டு இருந்தார். அதே சமயத்தில் அவருக்கு காயம் குணமாகிவிட்டாலும், சிறிய அளவில் நிக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் முதல் இரண்டு போட்டிகளை தவற விடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக 18ஆவது வீரராக கே எல் ராகுலுக்கு பேக்அப் வீரராக சஞ்சு சாம்சன் அணியுடன் பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இந்திய முன்னாள் வீரரும் இந்தியத் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்து இருக்கிறார்.