
இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று கயானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய போட்டிக்கான டாஸிலும் வென்று மிகத் தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.
இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 55 ரன் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். கையில் மேயர்ஸ் 25(20), சார்லஸ் 12 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், பிரண்டன் கிங் உடன் ஜோடி சேர்ந்தார். குல்தீப் வீசிய ஒரு ஓவரில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் மற்றும் ஒரு பிரம்மாண்ட பவுண்டரி அடித்து அசத்தினார். இன்னொரு முனையில் கிங்கும் அதிரடிக்கு இறங்க முற்பட்டார்.
இந்த நிலையில் சார்லஸை வீழ்த்தி இருந்த குல்தீப் யாதவ், தன்னுடைய கடைசி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் நிக்கோலஸ் பூரன் கிரீஸ் விட்டு இறங்கி வந்து அடிக்க முயல, சஞ்சு சம்சனால் 12 பந்துகளில் 20 ரன்களுக்கு ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதை அடுத்து அதே ஓவரில் பிரன்டன் கிங்கை 42 பந்துகளுக்கு 42 ரன்களில் தானே கேட்ச் பிடித்து வெளியேற்றினார் குல்தீப் யாதவ்.