
AUSU19 vs INDU19, 1st ODI: ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் வேதந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றிக்கும் உதவினர்.
இந்திய அண்டர்19 அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலைலையில், அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் டர்னர், சிமோன் பட்ஜ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஹோகன் ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் வில் மலாஜ்சுக் 17 ரன்களுக்கும், யாஷ் தேஷ்முக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஸ்டீவுடன் இணைந்த டாம் ஹோகனும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஸ்டீஸ் ஹோகன் 39 ரன்களுக்கும், டாம் ஹோகன் 41 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜான் ஜேம்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 77 ரன்களைச் சேர்த்தார்.