Advertisement

SA vs PAK, 2nd Test: இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைக்கும் மபாகா!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகாகும் முதல் வீரர் எனும் சாதனையை குவேனா மபாகா படைக்கவுள்ளார்.

Advertisement
SA vs PAK, 2nd Test: இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைக்கும் மபாகா!
SA vs PAK, 2nd Test: இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைக்கும் மபாகா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 03, 2025 • 08:49 AM

தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 03, 2025 • 08:49 AM

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.

Trending

மறுபக்கம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கும். இந்நிலையில் இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அணியின் தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதுதவிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அறிமுக வீரர் கார்பின் போஷ் மற்றும் டேன் பீட்டர்சன் ஆகியோருக்கும் இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வியான் முல்டர் மற்றும் காயத்தில் இருந்து மீண்டுள்ள கேசவ் மஹாராஜ் ஆகியோருடன் அறிமுக வீரர் குவெனா மபாகா ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மற்ற வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் குவேனா மபாகா இடம்பிடித்தன் மூலம் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகாகும் முதல் வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். தற்போது 18வயதே ஆகும் குவேனா மபாகா தென் ஆப்பிரிக்க அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கேப்டன்), டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன்(w), மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement