
Lahore Qalandars vs Islamabad United, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை (ஜூன் 9) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெற உள்ள 15 வது போட்டியில் சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்
- நேரம் : இரவு 9.30 மணி
- இடம்: ஷேக் சயீத் மைதானம், அபுதாபி