
Los Angeles Knight Riders vs SF, Match 30 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் யூனிகார்ன்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும். அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
LAS vs SF: Match Details